அதர்வா படத்தைக் கைப்பற்றிய எரும சாணி ஹரிஜா!
நடிகர் அதர்வா நடித்து வரும் முக்கியப் படத்தில் 'எரும சாணி' ஹரிஜா இணைந்துள்ளார்.
'எரும சாணி' என்ற யூ-ட்யூப் சானல் மூலம் பிரபலமானவர் ஹரிஜா. தமிழகமெங்கும் அவரது 'எரும சாணி' வசவுக்காகவே ரசிகர்கள் குவிந்தனர். சமீபத்தில் திருமண நிச்சயம் முடித்த ஹரிஜா தற்போது பெரிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் நடிகர் அதர்வா ஒரு க்ரைம் த்ரில்லர் படம் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தற்போது நம்ம 'எரும சாணி' ஹரிஜாவும் இணைந்துள்ளார். தனது வேடம் குறித்து வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், தான் ஒரு கணமான கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக மட்டும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஹரிஜா, இயக்குநர் ரமேஷ் வெங்கட் இயக்கத்தில் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' திரைப்படத்திலும் நடித்து வருகிறார். தனது சினிமா என்ட்ரி குறித்து ஹரிஜா கூறுகையில், "திரைப்படங்களில் கதாநாயகி வேடம்தான் என்றில்லை. எனக்கான கதாப்பாத்திரம் அந்தத் திரைப்படத்தின் கதைக்கு முக்கியக் கட்டமாக அமைய வேண்டும்" எனக் கூறினார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com