துப்பாக்கி ஏந்தும் நக்சலைட் கனிமொழியாக ஸ்வேதா மேனன்
மலையாளத்தில் உருவாகும் பதல் தி மேனிஃபெஸ்டோ என்ற படத்தில் நடிகை ஸ்வேதா மேனன் கனிமொழி என்ற நக்சலைட்டாக வருகிறார்.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஸ்வேதா மேனன். இவர் மலையாளத்தில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, தமிழ் உட்பட பல மொழிகளிலும் நடித்துள்ளார். பாலேரி மாணிக்கம் ஒரு பாதிரா கொலபாதகம் என்ற மலையாள படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இவருக்கு கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது.இந்நிலையில் சமீபகாலமாக ஸ்வேதா மேனனுக்கு அதிகமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் அந்த குறையை போக்குவதற்காக வலிமையான கதாபாத்திரத்தில் அவர் நடிக்கும் ஒரு படம் வெளியாக தயாராகிக் கொண்டிருக்கிறது. அஜயன் என்ற புதுமுக இயக்குனர் திரைக்கதை எழுதி டைரக்ட் செய்யும் பதல் தி மேனிஃபெஸ்டோ என்ற இந்த படத்தில் ஸ்வேதா மேனன் கனிமொழி என்ற நக்சலைட் வேடத்தில் நடித்துள்ளார்.துப்பாக்கி ஏந்தி நிற்கும் தன்னுடையை போட்டோவை ஸ்வேதா மேனன் தன்னுடையை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பே இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் பலமுறை படப்பிடிப்பு நின்றுபோனது. இந்நிலையில் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து இந்தப் படம் வெளியீட்டுக்கு தயாராகி விட்டது.
இந்தப் படத்தில் ஸ்வேதா மேனன் தவிர சலீம்குமார், அனூப் சந்திரன், சஜிதா மடத்தில் லியோனா மற்றும் பலர் நடித்துள்ளனர். மூணாறு, அட்டப்பாடி, பாலக்காடு ஆகிய இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்தது.