பெய்ரூட் துறைமுகத்தில் மீண்டும் தீ விபத்து !மக்கள் பீதி
கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதியன்று லெபனான் நாட்டின் தலைநகரமான பெய்ரூட் துறைமுகத்திலிருந்த அம்மோனியம் நைட்ரைட் சேமிப்பு கிடங்கில் பெரும் வெடிவிபத்து ஏற்பட்டது .அக்கிடங்கில் இருந்த ரசாயனங்களில் ஏற்பட்ட தீவிபத்து முறையற்ற பாதுகாப்புடன் அங்கிருந்த 2750 டன் அமோனியம் நைட்ரைட் வெடிக்க காரணமாயிருந்தது.இதில் 190 பேர் பலியாயினர் ,ஏழாயிரத்துக்கு அதிகமானோர் காயமடைந்தனர் மேலும் மூன்று லட்சம்பேர் வீடுகளை இழந்தனர் .
இந்த பெரும் வெடிப்பின் அதிர்வு 250 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிபிரேஸ் மற்றும் துருக்கி ,சிரியா ,இஸ்ரேல்,பாலஸ்தீன நாடுகளிலும் உணரப்பட்டது .இந்த வெடிப்பின் எதிரொலியாக சென்னை துறைமுகத்திலும் சேமிப்பு கிடங்கலிருந்த அமோனியம் நைட்ரைட் வெவ் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதோடு பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இதன் சுவடு மறைவதற்குள் பெய்ரூட் துறைமுகத்தில் மீண்டும் தீவிபத்து ஏற்பட்டு கரும்புகையாக வானம் மாறியது.முதல் கட்ட தகவலாக அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த எண்ணெய் மற்றும் டயர் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது .இன்னும் முழுமையான காரணம் தெரியவில்லை.இது சம்பந்தமான வீடியோ பதிவுகள் சமூக ஊடகத்தில் வெளியாகி அங்கு வாழும் மக்களை பீதியில் உறைய வைத்துள்ளது