கிரிக்கெட்டுக்கு குட்-பை சொன்னார் கெவின் பீட்டர்சன்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனுமான கெவின் பீட்டர்சன், சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து விடை பெறுவதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2014 வரை விளையாடி உலகின் முன்னணி பௌலர்களுக்கு கிலி கொடுத்த அதிரடி ஆட்டக்காரர் கெவின் பீட்டர்சன். இங்கிலாந்து அணியின் கேப்டனாக அவர் பதவி வகித்த குறைந்த காலத்தில் பல சர்ச்சைகளில் சிக்கினார்.

அவர் கிரிக்கெட் வாழ்க்கையில் அடிக்கடி காயம் காரணமாக விடுப்பு எடுத்ததும் விமர்சிக்கப்பட்டது. ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியின் கேப்டனாகவும் அவர் சிறிது காலம் செயல்பட்டார். 2014-ம் ஆண்டில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, `இனி இங்கிலாந்து நாட்டின் சார்பில் நான் கிரிக்கெட் விளையாடமாட்டேன்’ என்று பகிரங்கமாக அறிவித்து அதிர்ச்சியூட்டினார்.

பின்னர் பல்வேறு நாடுகளில் நடந்த கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்றார். இப்போது கூட பாகிஸ்தானில் நடந்து வரும் பிஎஸ்எல் தொடரில் விளையாடி வருகிறார். இந்தத் தொடருடன் அவர் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

More News >>