நிலவேம்பு கஷாயத்தால் பக்க விளைவு? - கமல்ஹாசன் மீது பாயுமா வழக்கு
நிலவேம்பு கஷாயத்தால் பக்க விளைவுகள் ஏற்படலாம் என்று கூறிய நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது டிவிட்டர் பக்கத்தில், “நிலவேம்பு கஷாயத்தால் பக்க விளைவுகள் ஏற்படலாம், சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டு இருந்தார்.
அவரது இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் மீது தேவராஜன் என்பவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் தான் 10 ஆண்டுகளாக நிலவேம்பு கஷாயத்தை அருந்தி வருவதாகவும், அதனால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், நிலவேம்பு கஷாயத்தை பற்றி கமல் தவறான தகவல்களை பரப்பி வரும் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.