`கிம்மை கண்டிப்பாக சந்திப்பேன்!- ட்ரம்ப் உறுதி

வட கொரியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை கண்டிப்பாக நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.

வட கொரியாவின் அபரிமிதமான அணு ஆயுத சோதனையால் கொரிய தீபகற்பத்தில் கடந்த ஓர் ஆண்டாகவே பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்னர் வடகொரியா, `அமைதி நோக்கி திரும்ப விரும்புகிறோம்’ என்று தெரிவித்தது. இதையடுத்து, தென் கொரிய அரசு அதிகாரிகள் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தைக்கு பின் வடகொரிய அரசு, `இரு கொரிய நாடுகளும் அமைதி பாதையில் பயணித்து உலக நாடுகளுக்கு முன்னுதரணமாக இருக்கும்’ என்று அறிக்கை விட்டது. பின்னர், தென் கொரிய அதிகாரிகளிடம், `அதிபர் கிம் அமெரிக்காவுடனான அமைதி பேச்சுவார்த்தைக்குத் தயார்’ என்று கூறியுள்ளது வடகொரியா. இது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்குத் தெரிவிக்கப்பட, அவரும் சுமூக பேச்சுவார்த்தைக்கு இசைவு தெரிவித்தார்.

ஆனால், அமெரிக்க அரசு, `பேச்சுவார்த்தைக்கு முன்பு அணு ஆயுதங்களை வடகொரியா முழுவதுமாக கைவிட வேண்டும்’ என்றது. இதனால் இரு நாட்டுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தை நடக்காமல் போகுமோ என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால், இதை புறந்தள்ளும் வகையில் ட்ரம்ப் – தென் கொரிய அதிபர் மூன் ஆகியோர் இடையில் நடந்த உரையாடல் அமைந்துள்ளது.

இரு நாட்டுத் தலைவர்கள் இன்று தொலைபேசி மூலம் பேசியதை அடுத்து, ட்ரம்ப் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், `வடகொரிய அதிபர் கிம்மை, அதிபர் ட்ரம்ப் மே மாத இறுதியில் சந்திப்பதில் மாற்றமில்லை என்று தென் கொரிய அதிபர் மூன் இடம் தெரிவித்துள்ளார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

More News >>