7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரின் கை துண்டிப்பு
ஹரியானாவில் தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியைத் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்த வாலிபரின் கையை துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஹரியானா மாநிலம் பானிப்பட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் அங்குள்ள ரயில்வே ஸ்டேஷன்பகுதியில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை ஒரு வாலிபர் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிறுமியைப் பலாத்காரம் செய்தது உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இக்லாக் எனத் தெரியவந்தது.
இந்நிலையில் இக்லாகை மர்ம நபர்கள் தாக்கி அவரது வலது கையை துண்டித்தனர். அவர் பானிப்பட்டிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து இக்லாகின் சகோதரர் போலீசில் புகார் செய்துள்ளார். பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் உறவினர்கள் தான் தனது சகோதரனின் கையை வெட்டியதாக அவர் போலீசில் தெரிவித்துள்ளார். ஆனால், தான் முஸ்லிம் என்பதால் சிலர் சேர்ந்து கையை வெட்டியதாக இக்லாக் கூறியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.