தாகூர் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் கங்கனாவுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பா?!.. காங்கிரஸ் கிளப்பிய சர்ச்சை

கங்கனா ரனாவத் கடந்த சில வாரங்களாக மகாராஷ்ட்ரா ஆளும் கட்சி சிவசனாவுடன் மோதல் போக்கு கடைப்பிடித்து வருகின்ற நிலையில் அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் பிளஸ் பாதுகாப்பு கொடுத்த சர்ச்சை தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹூவா மொய்த்ரா, ``ஒரு லட்சம் மக்களுக்கு 138 காவலர்கள், உலக அளவில் 71 நாடுகளில் குறைந்த அளவு காவலர்களைக்கொண்ட நாடுகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. அப்படி இருக்கும்போது நடிகர்களுக்கு ஏன் உயர்மட்ட பாதுகாப்பு வழங்கப்படவேண்டும். நடிகர்களுக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்படுவது ஆச்சரியமளிக்கிறது. இருக்கும் காவலர்களைச் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டாமா உள்துறை அமைச்சரே?" என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியும் கங்கனாவுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு கொடுத்ததைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. சமீபத்தில் பாஜகவை விட்டு வெளியேறிய உதித் ராஜ், இது தொடர்பாகப் பேசும்போது, ``பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தலித் சிறுமி இதேபோல் தனக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வேண்டும் எனக் கேட்டபோது மோடி அரசு அவர்களுக்கு எந்த பாதுகாப்பும் வழங்கவில்லை.

ஆனால் இப்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் கங்கனா ரனாவத் தாகூர் பிரிவைச் சேர்ந்தவர் என்பதாலேயே மோடி அரசு அவருக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு வழங்கி உள்ளது" என்று கூறியுள்ளார். இது தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

More News >>