மெர்குரி படத்தின் உரிமையை வாங்கியது டிரைடண்ட் ஆர்ட்ஸ்
பிரபுதேவா நடித்துள்ள மெர்குரி படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை வாங்கியது பிரபல டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா, ரம்யா நம்பீசன், இந்துஜா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் மெர்குரி. த்ரில்லர் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் வசனங்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க இசையின் பின்னணியிலேயே நகரும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்த படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
சமீபத்தில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்தப் படம் வரும் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 13ம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மெர்குரி படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்த தகவலை கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com