மாஸ்க் அணிவதால் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகள்??எவ்வாறு தீர்வு காணலாம்??
இந்த கொரோனா காலத்தில் மாஸ்க் அணியாமல் வெளியே போனால் நோய் தொற்று உறுதி... அதுபோலஅதிக நேரம் மாஸ்க் அணிவதால் சரும பிரச்சனைகளும் தோன்றுகிறது.தொற்று பரவாமல் இருக்க மாஸ்க்கும் தேவை ஆனால் சருமத்திற்கு எந்த வித பாதிப்பும் எற்படக்கூடாது என்று நினைக்கும் மக்களுக்கு சரும பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தக்க வழிமுறைகளை காணலாம்.
முகத்தை கழுவ வேண்டும்:-
மாஸ்க் நம்மை மாசு படிந்த காற்றில் இருந்து காக்கின்றது.ஆனால் அதிக நேரம் மாஸ்க் அணிவதால் வேர்வை வெளியாவதால் சரும பாதிப்பு ஏற்படுகிறது.இதனை தடுக்க மாஸ்க் அணிந்து வீட்டிற்க்கு வந்தவுடன் முகத்தை குளிர்ந்த நீரில் நன்றாக கழுவ வேண்டியது அவசியம்.வாரத்தில் ஒரு நாள் வெந்நீரீல் ஆவி பிடிப்பது நல்லது.அவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறி சருமம் பாதுகாப்பாக இருக்கும்.
சன்ஸ்கிரீன் அவசியம்:-
நாம் எங்கு சென்றாலும் சருமத்தை பாதுக்காக்க சன்ஸ்கிரீன் முக்கியமானது. சன்ஸ்கிரீன் அணிவதன் முக்கியத்துவம் புறஊதா கதிர்களில் இருந்து பாதுகாத்து கொள்வதே....வெயில் காயிந்தாலும் மழை பெய்தாலும் சன்ஸ்கிரீன் அவசியமானது.இது முகச் சுருக்கங்கள் ஏற்படாதவாறு காக்கின்றது.சன்ஸ்கிரீன் பயன்படுத்தி மாஸ்க் போடுவதால் சரும பாதிப்பு இருக்காது.
கருமையை போக்க:-
மாஸ்க் இருக்கமாக அணிவதால் முகம் மாஸ்க் அணியும் இடத்தில் மட்டும் கருமை அடைகிறது.இதனால் மாஸ்க்கை சற்று எளிமையாக சுவாசிக்கும் படியாக இருக்க வேண்டும்.மாஸ்க் என்பது ஒரு மென்மையான துணியில் இருந்தால் சருமம் எரிச்சலுக்கு ஆளாகாது.மென்மையான துணி அணிந்தால் முகத்தில் வீக்கம்,முகம் சிவத்தல் ஆகியவை ஏற்படாது.