ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் சஸ்பென்ஸ் நடிகை
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு விரைவில் படமாக வெளிவரப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இயக்குனர் ரவிரத்தினம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்து படம் எடுக்கப் போவதாக அறிவித்தார். மேலும், ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகையை தேர்வு செய்துவிட்டதாகவும், அந்த நடிகை யார் என்பது குறித்து தற்போதைக்கு சஸ்பென்ஸாக வைக்கப்படுவதாகவும் இயக்குனர் ரவிரத்தினம் கூறினார்.
ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை குறித்து வரும் மே மாதம் நடைபெற இருக்கும் இப்படத்தின் பூஜை அன்று அறிமுகப்படுத்தப்படும் எனவும் கூறினார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com