திரிஷாவுடன் அறிமுகமாக உள்ள நடிகையின் கவர்ச்சிப் போட்டோவுக்கு வந்த சிக்கல்
திரிஷாவுடன் ராங்கி படத்தில் அறிமுகமாக உள்ள மலையாள நடிகை அனஷ்வரா ராஜன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அவரது படங்களுக்கு ஆபாச கமெண்டுகள் குவிந்து வருகின்றன.மலையாளத்தில் முன்னணி நடிகை மஞ்சு வாரியருடன் உதாகரணம் சுஜாதா என்ற படத்தில் அறிமுகமானவர் அனஷ்வரா ராஜன். இந்தப் படத்தில் மஞ்சு வாரியரின் மகளாக இவர் சிறப்பாக நடித்திருந்தார். அப்போது அவர் 8ம் வகுப்பில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த வருடம் இவர் நாயகியாக அறிமுகமான தண்ணீர் மத்தன் தினங்கள் என்ற படம் சூப்பர் ஹிட்டாக ஓடியது. இதன் பிறகு இவரது கிராப் உயர்ந்தது. தொடர்ந்து ஆத்ய ராத்திரி என்ற படத்தில் அஜு வர்கீசுடன் ஜோடி சேர்ந்தார்.
சிறு வயதிலேயே அனஷ்வராவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. மலையாளத்தில் ஹிட் அடித்தால் அடுத்த குறி தமிழ் தானே. அவருக்குத் தமிழிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. திரிஷா நடிக்கும் ராங்கி மூலம் இவர் தமிழில் அறிமுகமாக உள்ளார். இந்நிலையில் நேற்று இவர் தனது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய ஏராளமான போட்டோக்களை வெளியிட்டார். வழக்கமாகத் தாவணி, சேலை போன்ற பாரம்பரிய உடை அணிந்து போஸ் கொடுத்து வந்த அனஷ்வரா இம்முறை மாடர்ன் டிரஸ் அணிந்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதில் சில போட்டோவில் கையின் மேல் பகுதி தெரியும் அளவுக்கு மேலாடையை இறக்கியபடி போஸ் கொடுத்திருந்தார்.
இந்த போட்டோக்களுக்குத் தான் ஆபாச கமெண்டுகள் குவிந்து வருகின்றன. 18 தானே ஆகியிருக்கிறது, அதற்குள் கவர்ச்சி போஸ் கொடுக்க தொடங்கியாச்சா?, அடுத்தது என்ன டிரஸ்? இப்படியும், இதைவிட மோசமாகவும் ஏராளமான கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளன. அனஷ்வரா மீது தொடரப்படும் தாக்குதலுக்குச் சிலர் எதிர்த் தாக்குதலும் தொடுத்து வருகின்றனர். ஒருவர் என்ன டிரஸ் போட வேண்டும் என்பது அவரவர் விருப்பம், அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று அனஷ்வராவுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.