திமுக எம்.பி.யின் ரூ.89 கோடி சொத்துக்கள் முடக்கம்..

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் குடும்பத்தினரின் ரூ.89 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர்.சில்வர் பார்க் இன்டர்நேஷனல் என்ற சிங்கப்பூர் நிறுவனம், இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலில் 385 கோடி டாலர் (ரூ.26000 கோடி) முதலீடு செய்யவிருப்பதாக இலங்கை முதலீட்டு வாரியம் தெரிவித்திருந்தது. இந்த சிங்கப்பூர் நிறுவனத்தில் திமுகவைச் சேர்ந்த அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் முதலீடு செய்திருக்கிறார்.

பின்னர், அந்த நிறுவனத்தில் உள்ள தனது முதலீடுகளைத் தனது மகள், மகன் மற்றும் மனைவி ஆகியோருக்கு மாற்றியிருக்கிறார். இதில் ரிசர்வ் வங்கி அனுமதி பெறாமல் பல்வேறு விதிகளை மீறியுள்ளதாக மத்திய அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில், இந்த வழக்கின் அடிப்படையில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

More News >>