ஓய்வறையை நொறுக்கி தள்ளிய வங்கதேச வீரர்கள்!

இலங்கை அணியுடனான போட்டியில் வெற்றி பெற்றதற்கு பிறகு, தங்களது ஓய்வறையை வங்கதேச வீரர்கள் நொறுக்கிய தள்ளிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடைசி ஓவரின் நோ-பால் விவகாரம் தொடர்பாக வங்கதேச வீரர்கள், இலங்கை கேப்டன் திசாரா பெரேராவிடம் ஏதோ கோபத்தில் கூற, இரு அணி வீரர்களும் ஒருவரை ஒருவர் இடித்து தள்ளி மோதலில் ஈடுபட்டனர். அப்போது வங்கதேச கேப்டன் சாகிப் அல் ஹாசன் கோபத்தில் தங்களது வீரர்களை வெளியே வருமாறு கத்தினார்.

மைதான நடுவர்கள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வழியாக மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மஹமதுல்லா சிக்சர் அடித்து வெற்றி பெற வைக்க, வங்கதேச வீரர்கள் மைதானத்தில் ஆக்ரோஷமாக கத்தி இலங்கை வீரர்களை கேலி செய்து பாம்பு நடனம் ஆடி கொண்டாடினார்கள்.

இலங்கை வீரர் குசால் மெண்டீஸ் வங்கதேச வீரர்களை நோக்கி கோபமாக திட்ட, ஆத்திரமடைந்த வங்கதேச வீரர்கள் ஓய்வறையில் இருந்த கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை நொறுக்கியெடுத்தனர். இந்த விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் வாரியத்திற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் வீடியோ ஆதாரத்துடன் அறிக்கை அனுப்பியுள்ளது.

வங்கதேச வீரர்கள் மீது ஐ.சி.சி கடுமையான நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வங்கதேச அணி நிர்வாகம் ஓய்வறையில் ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டை ஈடு செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

More News >>