நான் இறந்துவிட்டேன் - சர்ச்சை நடிகை ட்வீட்
கமல்ஹாசனின் பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்டவர் நடிகை மீரா மிதுன். போதை ஏறி புத்தி மாறி. தானா சேர்ந்த கூட்டம் படங்களிலும் நடித்தார். பிரபலங்களை பற்றி அடிக்கடி சர்ச்சை கருத்துக்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
நடிகர்கள் விஜய், சூர்யா, திரிஷா ஆகியோரைப் பற்றி சர்ச்சைக் கருத்துக் கள் வெளியிட்டதுடன் அவர்களது குடும்பத்தினரை பற்றியும் தவறாக பேசினார். இதையடுத்து விஜய், சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை கடுமையாக தாக்கி மெசேஜ் வெளியிட்டனர். விஜய் ரசிகர்கள், நடிகை மீது போலீசில் புகார் அளித்தனர். புதுச்சேரியில் கலாம் அமைப்பினர் மீரா மிதுனின் உருவ பொம்மை எரித்தனர். மேலும் இயக் குனர் பாரதிராஜா, நடிகர்கள் சூர்யா, விஜய் பற்றி தவறான கருத்துக்கள் வெளிட்ட மீரா மிதுனுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன் கமல்ஹாசனை வம்புக்கிழுத்து மீரா, வீடியோ வெளியிட்டார். அதில் பிக்பாஸ் 4 போட்டியை நடத்தவிடமாட்டேன். கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை பெறுவேன் என கூறினார்.
இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத் தில் தான் இறந்துவிட்டதாக தானே தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். மீரா மிதுன் இறந்து விட்டார். போஸ்ட் மார்ட்டம் நடக்கிறது. போலீஸ் விசாரணையை தொடங்கி இருக்கிறது. ஆன்மா சாந்தி அடை யட்டும் என தெரிவித்திருக்கிறார். இது அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. மீராவே இந்த மெசேஜை பதிவிட்டரா அல்லது யாராவது அவரது டிவிட்டர் கணக்கை ஹேக் செய்து இப்படி மெசேஜ் பதிவு செய்தார்களா? என்பது தெரியவில்லை.