தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை கொன்று நகை கொள்ளை!
தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம், தொரப்பாடி (புதுப்பேட்டை) பேரூராட்சி, கள்ளான்குட்டை பகுதியில் வசித்து வந்தவர் சின்னப்பொண்ணு (80). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
சின்னப்பொண்ணு ஆடு மேய்த்தும், முதியோர் உதவித்தொகை பணத்தைக் கொண்டு குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். அண்மையில் ஆடுகளை விற்று வந்த பணத்தில் நகைவாங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் சின்னப்பொண்ணு வாயில் துணியை வைத்து அழுத்தி, கை, கால்களைக் கட்டி கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த நகை, வீட்டிலிருந்த பணத்தை திருடிச்சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com