நீட் தேர்வு அச்சத்தால் மீண்டும் ஒரு தற்கொலை.. பறிபோன தருமபுரி மாணவரின் உயிர்!
மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்காக மத்திய அரசு நடத்தும் நீட் என்ற தகுதித் தேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்வை ரத்து செய்யக் கோரி, பல்வேறு மாநில அரசுகளும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடியாயின. இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த ஜோதி ஸ்ரீ துர்கா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு குறித்த பயத்தின் காரணமாகத் தற்கொலை செய்து கொள்வதாக அந்த மாணவி கடைசியாகப் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, நீட் தேர்வின் மீதான பயம் காரணமாக, அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர், கடந்த வாரம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மாணவியின் மரணம் தமிழகத்தில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சியின் தடம் மறைவதற்குள் மேலும் நீட் தற்கொலை நிகழ்ந்துள்ளது. தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதித்யா என்ற மாணவர், நீட் தேர்வு பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நாளை ஆதித்யா நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் இன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார்.