நடிகை மியா ஜார்ஜின் திருமண ஆடை ரெடியாக எத்தனை மணிநேரம் ஆனது தெரியுமா?

நேற்று எர்ணாகுளத்தில் நடந்த திருமணத்தில் பிரபல மலையாள நடிகை மியா ஜார்ஜ் அணிந்திருந்த ஆடையை தயாரிக்க 487 மணிநேரம் ஆனதாம்.பிரபல மலையாள நடிகை மியா ஜார்ஜின் திருமணம் நேற்று எர்ணாகுளத்திலுள்ள செயின்ட் மேரீஸ் சர்ச்சில் நடந்தது. எர்ணாகுளத்தை சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்வின் பிலிப் தான் மணமகன். இது இரு வீட்டாரும் சேர்ந்து நிச்சயித்த திருமணம் ஆகும். கடந்த மே மாதமே நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டது. கொரோனா காலம் என்பதால் நிச்சயதார்த்தம், திருமணம், வரவேற்பு உட்பட நிகழ்ச்சிகளில் குறைந்த எண்ணிக்கையிலான ஆட்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

நேற்று திருமணத்தின் போது நடிகை மியா ஜார்ஜ் ஒரு கிளாசிக் வெட்டிங் கவுன் அணிந்திருந்தார். முழுக்க முழுக்க கை வேலைப்பாடுகளுடன் தயாரான இந்த வானிலா நிற லாங்க் கவுன் அனைவரையும் மிகவும் கவர்ந்தது. லேபல் எம் டிசைனர்ஸ் தான் இந்த திருமண ஆடையை உருவாக்கியிருந்தனர். இதை தயாரிக்க 487 மணிநேரம் ஆனதாம். 10 தொழிலாளர்கள் சேர்ந்து 487 மணிநேரம் சிரமப்பட்டு இந்த திருமண ஆடையை தயாரித்ததாக லேபல் எம் டிசைனர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.திருமணத்திற்கு முந்தைய நாள் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் மியா ஜார்ஜ் பட்டு சேலை அணிந்திருந்தார். திருமணத்தையொட்டி மியா ஜார்ஜ் அணிந்திருந்த உடைகள் அனைத்துமே புதிய டிசைன்கள் என்பதால் கேரளாவிலுள்ள சமூக இணையதளங்களில் இது குறித்துத் தான் விவாதிக்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு பிறகும் நடிப்பை கைவிடப் போவதில்லை என்று நடிகை மியா ஜார்ஜ் கூறியுள்ளார்.

More News >>