போதை மருந்து பரிசோதனையில் பிரபல நடிகை ஏமாற்று வேலை..என்ன செய்தார் தெரியுமா?

பெங்களுரில் டிவி நடிகை அனிகா உள்ளிட்ட சிலர் போதை பொருள் கடத்துவதாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணை மற்றும் கிடைத்த டைரி ஆதாரம் மேலும் போலீசுக்கு வந்த ரகசிய தகவல்களை வைத்து அதிரடி விசாரனை நடந்துக் கொண்டிருக்கிறது.போதை மருந்து கடத்தி விற்றதாக நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் மீது வந்த புகரை அடுத்து அவர்களை விசாரனைக்கு ஆஜாராக சம்மன் அனுப்பப்படாது. அதன்படி பிரபல நடிகை ராகினி திவேதி விசாரணைக்கு ஆஜரானார், அப்போது அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் ராகினியின் நண்பர் ரவி சங்கர் என்பவரும் கைதானார். இவர் அரசு ஊழியராகவும் இருந்து வருகிறார். மேலும் ராகினி திவேதியிடம் நடத்திய விசாரணையில் வருகிறார்கள். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் தந்த தகவல் அடிப்படையில் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த வாலிபர் லோயம் பெப்பர் சம்பா (வயது 33) கைது செய்யப்பட்டுள்ளார். அவர் போதை மருந்துக்களை கடத்தி வந்து உள்ளூர் ஆட்கள் மூலம் விநியோகிப்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.அப்படி கடத்தி வரப்படும் போதை பொருட்களை பிரபலங்கள் நடத்தும் பார்ட்டிகளுக்கு ரவிசங்கர் மூலம் தரப்படுவதும் தெரியவந்துள்ளது.

இந்தவிகாரத்தில் கடந்த 4ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட ராகினி திவேதி பெங்களூர் மடிவாளா மகளிர் கைதிகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அழைத்துச் சென்றனர். சிறுநீர் சேம்ப் எடுத்ததரக் கேட்டனர். ஆனால் அவர் சீறுநீரில் தண்ணீரை கலந்து கொடுத்து ஏமாற்ற முயன்றார். அதை கண்டிபிடித்த டெஸ்ட் லேப் ஊழியர்கல் இதுபற்றி புகார் செய்தனர். போதைப்பொருளைப் பயன்படுத்து வதை சிறுநீர் பரிசோதனையில் கண்டறிய முடியும் என்பதால் அதில் கண்டறிய முடியாதபடி சிறுநீரில் தண்ணீரைச் சேர்த்து அதன் வெப்ப நிலையை குறைக்கும் செயலில் ஈடுபட் டாராம். ராகினியிடம் மீண்டும் சிறுநீர் மாதிரியை பெற்று பரிசோதனைக்காக டெஸ்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.ராகினியின் இந்த மோசடி தொடர்பாக கோர்ர்டில் விசாரனையின்போது மாஜிஸ்திரேட்டிடம் தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

More News >>