பப்பி ஷேம் படத்தால் உலக அளவில் ட்ரெண்டிங் ஆன ஹாலிவுட் ஹீரோ.. அமெரிக்க முழுவதும் கணக்கில்லாமல் குவியும் மீம்ஸ்களால் பிரமிப்பு..
ஹாலிவுட்டில் பிரமாண்ட பொருட் செலவில் எடுக்கப்பட்டு அடுத்தடுத்த பாகங்களாக வெளியான படம். தி அவெஞ்சர்ஸ். வசூலில் பெரும் சாதனை படைத்தது. உலகை அழிக்க வருபவனிட மிருந்து உலகை காப்பாற்றும் ஹீரோவாக நடித்திருந்தார் ஹாலிவுட் நடிகர் கிறிஸ் எவான்ஸ். எவ்வளவு பெயரையும், புகழையும் சம்பாதித்தாரோ ஒரே நாளில் அவ்வள வையும் கேலிக்கூத்தாக்கி விட்டார்.
படப்படிப்பு இல்லாமல் வீட்டில் முடங்கி இருக்கும் நடிகர், நடிகைகள் தங்களது த்ரோபேக் பிக்சர் என்று சொல்லி பழைய படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகின்றனர். அதைப் பார்த்து கிறிஸ் எவன்ஸுக்கும் ஆசை வந்தது. அவரும் தான் ஸ்டாக் செய்து வைத்திருந்த படங்களை வெளி யிட்டார். அதில் ஒரு படம் அவர் நிர்வாண தோற்றத்தில் இருக்கும் படமும் வெளியாகி விட்டது. சிறிது நேரத்தில் அதை கவனித்த கிறிஸ் எவான்ஸ் உடனடியாக எல்லா படங்களையுமே டெலிட் செய்து தப்பிச்சோண்டா சாமி என்று பெருமூச்சுவிட்டார். ஆனால் மின்னல் வேகத்தில் அந்த படங்கள் வைரலாகி விட்டது.
உலகம் முழுக்க உள்ள ரசிகர்கள், பிரபலங்கள் கிறிஸை கழுவி கழுவி ஊற்றிக்கொண்டிருகின்றனர். அந்தரங்க படத்தையே காப்பாற்ற முடியாதவர் உலகத்தை எப்படி காப்பாற்றுவார் என்று அவரை இஷ்டத்துக்கும் கலாய்த்து வருகின்றனர். அதை கட்டுப்படுத்த முடியாமல், போதும் இதோட நிறுத்திக்குவோம் என்று வடிவேல் பாணியில் ரசிகர்களை சமாதானம் செய்ய முயன்றுக் கொண்டிருக்கிறார் கிறிஸ் எவான்ஸ். ஆனால் அமெரிக்கா முழுவதும் அவரைப் பற்றிய மீம்ஸ்கள் கணக்கில் லாமல் குவிந்த வண்ணமிருக்கிறது.