கொரோனா முடிந்ததும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல பிரபல நடிகை திட்டம்..
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவியது. பல லட்சம் பேர் கொரோனா வைரஸுக்கு பலியாகி உள்ளனர். கோடிக்கணக்கானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படிருக்கின்றனர். இந்தியாவில் கடந்த 5 மாதமாக கொரோனா ஊரடங்கு இருந்தபோதும் தொற்று பரவலாக இருந்த வண்ணம் இருக்கிறது.
திரைத்துறையில் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், விஷால். ஐஸ்வர்யாராய், நிக்கி கல்ராணி. ஐஸ்வர்யா அர்ஜூன், எஸ்.எஸ்.ராஜ மவுலி , பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு மீண்டனர். இவர்களில் எஸ்பி.பால சுப்ரமணியம் கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்த போதும் உடல்நிலை பாதிப்பிலிருந்து மீளவில்லை அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக இருக்க வேண்டும் அப்போதுதான் விரைவில் குணம் அடைவார்கள். கொரோனா தொற்று முடிந்த பிறகு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல இருப்ப தாக நடிகை கீர்த்தி சுரேஷ் கூறி உள்ளார்.இதுபற்றி அவர் கூறியதாவது:
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அந்த தொற்று நமக்கு வந்துவிடுமோ என்று நினைத்து பயப்படுகிறவர்களுக்கு எனது ஆலோசனை என்னவென்றால் முதலில் அதை நினைத்துப் பயப்படக்கூடாது. என்னைப் பொருத்தவரை எனக்கு ஏதாவது தேவையென்றால் முதலில் எனக்கு ஞாபகம் வருவது என் அம்மாதான். கொரோனா கஷ்டகாலத்தில் ஒவ்வொருவருக்கும் தைரியம் கொடுப்பது அவர்கள் அம்மாதான். உனக்கு ஒன்றும் ஆகாது என்ற அம்மா சொல்லும் அந்த வார்த்தை நமக்கு ஆயிரம் யானைகள் பலம் கிடைத்ததுபோல் இருக்கும்.
கொரோனா லாக்டவுனில் நிறைய விஷயங்கள் கற்றுகொண்டேன். எடை குறைப்பதற்காக நிறைய உடற்பயிற்சிகள் செய்தேன். பருப்பு ரசம், வெங்காய தோசை செய்தேன். மேலும் ஒரு கதையும் எழுதி இருக்கிறேன். மனித னுக்கு பணம் பெரிது அல்ல. மனிதாபி மானம் ரொம்ப முக்கியம் என்பதை கொரோனா கற்றுக்கொடுத்து இருக்கிறது. படப்பிடிப்யிலிருந்து அழைப்பு வந்தவுடன் ரஜினிஸாரின் அண்ணாத்த படத்தில் நடிக்க இருக்கிறேன். கொரோனா தொற்று முழுவதுமாக முடிவுக்கு வந்த பிறகு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செல்ல திட்டமிட்டிருக்கிறேன். இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறி உள்ளார்.
இதையும் பாருங்க: விஜயின் அடுத்தப் படம், தனுஷ் - செல்வராகவன் காம்போ, சூர்யா படம் ஓடிடியில் மட்டும்தான் ரிலீஸ் ஆகுமா?