93 சதவீத குடிநீர் பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள் - அதிர்ச்சி தகவல்

உலகின் மிக முக்கிய நாடுகளில் முன்னணி நிறுவனங்களால் தயாரிக்கப்படும் குடிநீர் பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்து இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

நியூயார்க் பல்கலைகழகத்தைச் சேர்ந்த மைக்ரோ பிளாஸ்டிக் ஆய்வாளர் ஷெர்ரி மாஸோன் மேற்கொண்ட ஆய்வின்படி, குடிநீர் பாட்டில்கள் தயாரிப்பு மற்றும் பாட்டில்களில் குடிநீரை நிரப்பி அதனை மூடும் பணிகளின் போது பிளாஸ்டிக் துகள்கள் குடிநீரில் கலப்பதாக தெரிவிக்கிறது.

இந்த ஆய்வில் சீனா, இந்தியா, இந்தோனேசியா, கென்யா, லெபனான், மெக்ஸிகோ, தாய்லாந்து, அமெரிக்கா, பிரேசில், ஆகிய நாடுகளில் விற்பனையாகும் 250 குடிநீர் பாட்டில்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில், 93 சதவீத குடிநீர் பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள் இருந்துள்ளன. இவற்றில் ஆக்வா, பிஸ்லெரி, ஆக்வாஃபினா, தஸானி, ஏவியன், நெஸ்லே ப்யூர் லைஃப் மற்றும் சான் பெல்லெக்ரினோ ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் குடிநீர் பாட்டில்களிலும் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வின்படி, ஒரு குடிநீர் பாட்டிலில் அதிகபட்சமாக 10 ஆயிரம் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஒரு பகீர் தகவலும் தெரியவந்துள்ளது. இதுபோன்ற குடிநீரை குடிப்பதன் மூலம், மனிதனுக்கு புற்றுநோய் முதல் வெள்ளை அணுக்கள் குறைவு வரை பல நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 
More News >>