சிகிச்சைக்குப் பின் இரண்டாவது முறையாக கருணாநிதி அண்ணா அறிவாலயம் வருகை!

உடல்நலக் குறைவு காரணமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்து வந்த திமுக தலைவர் கருணாநிதி, இரண்டாவது முறையாக அண்ணா அறிவாலயம் வருகை தந்தது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2016 டிசம்பர் மாதம் 1ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் கடந்த ஓர் ஆண்டுகளுக்கு மேலாக உடல்நலக் குறைவு காரணமாக பொது இடங்களுக்கு வருவதையும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையும் கருணாநிதி தவிர்த்து வந்தார்.

தற்போது சென்னை கோபாலபுரத்திலுள்ள, தனது இல்லத்திலேயே அவர் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி அன்று இரவு அறிவாலயத்திற்கு வந்தார். அறிவாலயத்தில் அவரிடம் அளிக்கப்பட்ட காகிதத்தில் தனது கையெழுத்தை இட்டார் கருணாநிதி.

இந்நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து வரப்பட்டார். சுமார் மூன்று மாதத்துக்கு பின்னர் தற்போது அவர் அண்ணா அறிவாலயம் வந்தார். அவரை, திமுக செயல் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அண்ணா அறிவாலயத்தில் சில நிமிடங்கள் இருந்த கருணாநிதி, பின்னர் கோபாலபுரம் இத்துக்குத் திரும்பினார். கடந்த ஓராண்டுகளில் இரண்டாவது முறையாக அண்ணா அறிவாலயம் வந்த செய்தி அறிந்த தொண்டர்களும், நிர்வாகிகளும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

More News >>