சுயச்சார்பு என்றால் என்ன தெரியுமா.. ராகுல்காந்தி காட்டம்..
கொரோனா தொற்றில் இருந்து உங்களை நீங்களே பாதுகாத்து கொள்ள வேண்டும். அதுதான் சுயச்சார்பு என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். பிரதமரின் ஈகோவால் கொரோனா தொற்று பரவியதாகவும் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் அவர் தனது இல்லத்தில் மயிலுக்கு உணவு கொடுத்து கொண்டிருந்தார். இதையடுத்து, நாட்டு மக்கள் கொரோனாவால் பாதித்து கொண்டிருக்கையில், பிரதமர் மயிலுக்கு உணவு ஊட்டுகிறார் என்று சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் வெளிவந்தன. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று(செப்.14) வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக பரவிக் கொண்டிருக்கும் தருணத்தில், பிரதமரோ மயிலுடன் பிசியாக இருக்கிறார். மோடி அரசு, சுயச்சார்பு என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது. அது என்ன தெரியுமா? மக்கள் கொரோனா தொற்றில் இருந்து தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதுதான் சுயச்சார்பு. ஏனென்றால், பிரதமர் மயிலுடன் பிசியாக உள்ளார்.ஒரு மனிதரின்(பிரதமர்) ஈகோவால், திட்டமிடப்படாமல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, அதுவே நாடு முழுவதும் கொரோனா பரவுவதற்கு காரணமாகி விட்டது. இவ்வாறு ராகுல்காந்தி கூறியிருக்கிறார்.