மக்கள் முடிவை கொச்சைப்படுத்த வேண்டாம் - தமிழிசை சவுந்தரராஜன்
தேர்தலில் மக்கள் எடுக்கும் முடிவை இயந்திரத்தின் மீது போட்டு காங்கிரஸ் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “நான் சுற்றுபயணம் மேற்கொண்ட பகுதிகளில் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். பொதுமக்கள் அளித்த மனுக்களை முதல்வரிடம் தருவேன்.
எந்த இயந்திரத்தில் தேர்தல் நடந்தாலும் காங்கிரஸ் தோல்வி பெறும். எதைக் கொண்டு வைத்தாலும் தேர்தலில் காங்கிரஸ் டெபாசிட்தான் வாங்கும். தேர்தலில் மக்கள் எடுக்கும் முடிவை இயந்திரத்தின் மீது போட்டு காங்கிரஸ் கொச்சைப்படுத்த வேண்டாம்.
திராவிட நாடு குறித்த கருத்தில் ஸ்டாலின் குழப்பத்தில் உள்ளார். அதிமுகவை பாஜக இயக்குவதாக பொய்யான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. வரும் 30-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை பாஜக நிச்சயம் நிறைவேற்றும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com