கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருந்தாலும் இந்த வாரத்தில் பங்கு சந்தை எப்படி இருக்கும் !

கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருந்தாலும் , பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் பொதுமுடக்கத்தை தளர்த்தி , இயல்பு நிலைக்கு திரும்ப தயாராகி வருகிறது.

இந்நிலையில் பங்கு சந்தையில் நிலையில்லாத்தன்மையை நாம் கடந்த வாரத்தின் இறுதி வரை கண்டுணர்ந்தோம். பல முதலீட்டாளர்கள் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் சந்தையின் நிலையில்லாத்தன்மையில் பலரும் நட்டம் அடைந்தனர். குறிப்பாக வங்கிகளின் பங்கு வெகுவாக வீழ்ச்சி அடைந்தது . இதற்கு காரணமாக இந்திய - சீனா எல்லை பிரச்சினை , கொரோனா காலத்தில் வங்கிகள் வசூலிக்கும் வட்டிக்கு வட்டி , தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீதான வழக்கு போன்றவை இதற்கான காரணி கூறுகளாக பார்க்கப்பட்டன. ஆனால் வாரத்தின் இறுதியில் பங்கு சில புள்ளிவிவரங்கள் உயர்ந்து காளையின் கட்டுப்பாட்டில் முடிந்தது.

இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று பல முதலீட்டாளர்கள் பங்கின் நிலைத்தன்மையை நோக்கியே முதலீட்டுக்கான முடிவுகளை எடுக்க உள்ளனர் . ஆனால் சந்தை தொடங்கியதில் இருந்து புள்ளிகள் உயர்ந்து ஓரளவு நிலைதன்மையை அடைந்தது . இந்திய- சீன உறவுகளுக்கான 5 அம்ச கோரிக்கை , அம்பானியின் சில்லறை வர்த்தகத்தின் தாக்கம் சந்தையின் உயர்விற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

அதானியின் பவர் கம்பெனி , ரிலையன்ஸ் , ஜியோ , ஸ்டிரைட்ஸ் பார்மா , விப்ரோ போன்ற நிறுவனங்களின் பங்குகளால் தேசிய பங்கு சந்தை உச்சத்தை எட்டியது. மேலும் கொரோனா தாக்கத்தின் தொடக்கத்தில் இருந்தே கச்சா எண்ணெய் விலை குறைந்த வண்ணம் இருந்த நிலையில் , பொருளாதார நடவடிக்கைகளால் நிறுவனங்களை திறக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது . இதனால் உற்பத்தி உயர்வதற்கான வாய்ப்புள்ளதால் இனி வரும் நாட்கள் சந்தை ஒரு நிலைத்தன்மை மை பெரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>