கட்டுமானத்துறையில் அரசு வேலைவாய்ப்பு...பத்தாவது படித்திருந்தால் போதும்...!
தமிழக அரசின் கட்டுமானத்துறை தொழிலாளர்களின் நல வாரியம் Tamil Nadu Construction Workers Welfare Board (TNCWWB) சார்பில் வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு
மேலாண்மை : தமிழக அரசு
பணி : எழுத்தர்
மொத்த பணியிடம் : 37
தகுதி : 10-வது தேர்ச்சி
வயது: விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.15,900 முதல் ரூ.50,400 வரையில்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக https://tncwwb.onlineregistrationform.org/TNCWWB என்ற இணையதளம் மூலம் 30.09.2020 தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கட்டணம் : எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி தவிர அனைவருக்கும் தேர்வுக் கட்டணம் ரூ .500/- எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வுக் கட்டணம் ரூ .250.