ஐபிஎல்: எமோஜிகளை அறிமுகம் செய்தது ட்விட்டர்

2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அமீரகம், அபுதாபியில் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்க உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் ஐபிஎல்லில் விளையாடுகின்றன. 2019ஆம் ஆண்டு பைனலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தொடக்க ஆட்டத்தில் மோத உள்ளன.

ஐபிஎல் தொடங்குவதை முன்னிட்டு, ரசிகர்கள் தங்கள் விருப்ப அணிக்கு ஆதரவை காட்டும்படிக்கும், அரட்டைகளில் பங்குபெறும்படிக்கும் ட்விட்டர் இந்தியா நிறுவனம் வெவ்வேறு மொழிகளில் சிறப்பு எமோஜிகளை அறிமுகம் செய்துள்ளது.

#OneFamily, #WhistlePodu, #PlayBold, #KorboLorboJeetbo, #SaddaPunjab, #OrangeArmy, #HallaBol, #YehHaiNayiDilli

என்ற ஹேஷ்டேக்குகளை கொண்டு ஐபிஎல்லுக்கான ட்விட்டர் எமோஜிகளை பயன்படுத்தலாம்.

இதைக் குறித்து, "புது சீசன், புது எமோஜிகள்! இந்த ஆண்டு எங்கள் ட்விட்களுக்கு கொஞ்சம் அதிக சுவை கூடியுள்ளது," என்று கொல்கத்தா நைட் ரைடர் அணி பதிவிட்டுள்ளது.

"எங்கள் புது ட்விட்டர் எமோஜி தற்போது வெளியாகியுள்ளது," என்று மும்பை இந்தியன்ஸ் பதிவிட்டுள்ளது.

"சூப்பர் ஹேஷ்டேக்குகளுடன் விசில்போட ஆரம்பியுங்கள்," என்று சென்னை சூப்பர் கிங்ஸ் பதிவிட்டுள்ளது.

More News >>