வாழைப்பழத்தில் இனிப்பான கொழுக்கட்டை செய்வது எப்படி??
பல வகையான கொழுக்கட்டைகள் கேள்வி பட்டு இருப்பீர்கள் ஆனால் வாழை பழத்தில் கொழுக்கட்டை செய்யலாம் என்பது ஒரு புதிய வகையான உணவு என்று கூறலாம்.வாழைப்பழத்தில் செரிமானம் சக்தி உள்ளதால் வாழைப்பழ கொழுகட்டையும் ஆரோக்கிய உணவில் ஒன்று.இதனை மாலை டிபனாகவும் செய்தும் சாப்பிடலாம்.சரி வாங்க இதனை எப்படி செய்ய வேண்டும் என்பதை குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:-
இடியாப்ப மாவு-1 கப்
வாழைப்பழம்-1
சர்க்கரை-1/2 கப்
தண்ணீர்-3/4 கப்
ஏலக்காய் பவுடர்-1 ஸ்பூன்
நெய்-தேவையான அளவு
செய்முறை:-
அடுப்பில் கடாய் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
அடுத்து அதில் ஏலக்காய் பவுடர்,நெய் மற்றும் மசித்த வாழைப்பழமான ஒன்றை சேர்த்து கொண்டு நன்றாக கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் இடியாப்ப மாவை சேர்த்து கிளறி விடவும்.5 நிமிடம் பிறகு அடுப்பில் இருந்து மாவை இறக்கி காற்றில் குளிர வைக்கவும்.
பின்னர் மாவை உருண்டையாக உருட்டி இட்லி பாத்திரத்தில் ஒவ்வொரு உருண்டையாக வைத்து 10 நிமிடம் வேக வைத்தால் இனிப்பான.. சுவையான..வாழைப்பழ கொழுக்கட்டை ரெடி..