தினமும் இரவு இப்படி செய்து பாருங்க...அப்புறம் நீங்க தான் மிஸ்.இந்தியா!!
பெண்களின் சருமம் மிகவும் மென்மையானது.வெப்பம்,காற்று மாசு ஆகியவை சேர்ந்து முகத்தில் பருக்கள்,கரும்புள்ளிகள் ஆகியவை உண்டாகிறது.இதனை ஒழிக்க சருமத்திற்கு எற்ற மாஸ்கை முகத்தில் பயன்படுத்த வேண்டும்.தினமும் இரவு தூங்கும் முன் முகத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.இவ்வாறு செய்து வந்தால் முகம் பொலிவு அடையும்.
செய்முறை 1:-
எலுமிச்சை பழம்
தேன்
முதலில் ஒரு கப்பில் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து கொள்ள வேண்டும். கலந்த கலவையினை தினமும் இரவு முகத்தில் 15 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
15 நிமிடம் கழிந்த பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.இது போல் வாரத்தில் 2-3 முறை தொடர்ந்து செய்தால் முகம் பொலிவு பெறும்.
செய்முறை 2:-
துவரம் பருப்பு
பால்
முதலில் தேவையான அளவு துவரம் பருப்பை நீரில் ஊறவைக்கவும்.
பிறகு துவரம் பருப்பை நன்கு மிக்சியில் அரைத்து அதில் பாலினை சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு மிதமான நீரில் முகத்தை கழுவவும்.இந்த வழிமுறைகளை தினமும் பின் தொடர்ந்தால் முகம் பொலிவு பெறும்.