புதுக்கோட்டையில் பயங்கரம்: சொத்துக்காக தாயின் தலையை துண்டித்த மகன்
சொத்துக்காக பெற்ற தாயின் தலையை துண்டித்து மகனே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை, மறவன்பட்டியைச் சேர்ந்தவர் ராணி (54). இவரது மகன் ஆனந்த் (30). சொத்து தொடர்பாக ராணிக்கும், ஆனந்துக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது.
இந்நிலையில், இருவருக்கும் இடையே இன்று காலை சொத்து தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது வாக்குவாதமாக முற்றி பிரச்னை பெரிதாகி கைகலப்பு வரை சென்றுள்ளது. உச்சகட்டத்திற்கு சென்ற ஆனந்தின் கோபம், பெற்ற தாய் என்றுக் கூட பார்க்காமல் ராணியின் தலையை துண்டித்து கொலை செய்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை செய்துவிட்ட ஆனந்த் பின்னர், போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். தொடர்ந்து, சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஆனாந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com