சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
ஈரோட்டில், சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
ஈரோடு மாவட்டம், சித்தோடு, தயிர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி (45). இவரது கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்தது வருகிறார். இவர்களுக்கு தனுஷ்யா (18), பவித்ரா (13) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், ஜெயமணி தனது வீட்டில் மகள்களுடன் இருந்துள்ளார். அப்போது, இன்று காலை திடீரென சிலிண்டர் வெடித்தது. இதில், ஜெயமணி மற்றும் மகள்கள் இருவரும் கழிவறையில் பரிதாபமாக இறந்துக் கிடந்தனர். சம்பவத்தின்போது ஜெயமணியின் கணவர் வீட்டில் இல்லை என தெரிகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், மூன்று பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் ஜெயமணியின் கணவரிடம் இது கொலையா அல்லது தற்கொலையா அல்ல எதிர்ச்சியாக நடந்த சம்பவமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஒரே நேரத்தில் தாய், மகள்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com