2022வரை ரிலீஸ் செய்ய தடை கேட்டு சூரரைப் போற்று படத்துக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு,. ஹீரோ மீது அரசியல் தாக்குதல் என பரபரப்பு..

நடிகர் சூர்யா நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று. இதனைச் சுதா கொங்கரா இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடிக்கிறார். இப்படம் வரும் அக்டோபர் 30ம் தேதி ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது.இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி மொத்த பாடலும் வெளிவந்து விட்டது. நெட்டில் மில்லியன் பார்வைகளை கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது.

கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் திறக்கப்படாததால் வரும் அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரைமில் சூரரைப் போற்று ரிலீசாக உள்ளது. இதற்குத் திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டும் அதையும் கடந்து ஒடிடியில் வெளியிட முடிவானது.சூரரை போற்று பாடல்கள் வெளியாகிப் பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது திடீரென்று இப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏகாதசி வரிகளில் செந்தில் கணேஷ் குரலில் பாடிய மண் உருண்ட பாடலில்.. சாதி பிரச்சனையைத் தூண்டும் வரிகள் இடம்பெற்றிருப்பதாக தர்மபுரியை சேர்ந்த கார்த்திக் என்பவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

மேலும் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை வரும் 2022 வரை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி உள்ளார். வழக்கை விசாரித்த ஐகோர்ட் சூர்யாவின் சூரரைப் போற்று பாடலுக்கு எதிரான வழக்கை விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக விஜய் படங்களுக்குக் கடைசி நேரத்தில் அரசியல் குறுக்கீடுகள் வரும். தற்போது சூர்யாவுக்கும் அரசியல் குறுக்கீடு வருகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சமீபத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சூர்யா வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்கள் வெளியிட்டர். இது பரபரப்பை ஏற்படுத்தியது, பல இடங்களில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் நடக்கின்றன. இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா, தங்கர்பச்சான் போன்றவர்கள் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் சில தரப்பினர் சூர்யாவுக்கு எதிராகப் போராட்டம் தூண்டி விடப்படுகிறதா என்று ரசிகர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.

More News >>