ஹாக்கின்ஸ் குக்கர்ஸ் ( Hawkins cookers limited ) வழங்கும் நிரந்தர வைப்பு நிதி திட்டம்!
ஹாக்கின்ஸ் குக்கர்ஸ் ( Hawkins cookers limited ) மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் வீட்டு உபயோக பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்கிறது .இந்த நிறுவனம் தங்களின் நிதி மூலத்தைத் திரட்டுவதற்காக புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தில் வெகுஜன மக்கள் அனைவரும் பங்கு பெறலாம். இது ஒரு நிரந்தர வைப்பு நிதி திட்டமாகும்.இந்த திட்டம் இந்த மாதம் (செப்டம்பர் ) 18 ல் இருந்து தொடங்க இருக்கிறது . விருப்பம் உள்ள முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தின் இணைய தளத்தில் முதலில் தங்களின் பங்களிப்பைப் பதிவு செய்து உறுதிசெய்து கொள்ள வேண்டும் .
இந்நிறுவனம் இந்த திட்டத்தின் மூலம் 48.88 கோடி நிதி ஆதாரத்தைத் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதில் 13.97 கோடியை அந்நிறுவன உறுப்பினர்களிடம் இருந்து திரட்ட முடிவெடுக்கப்பட்டு உள்ளது . மீதமுள்ள 34.91 கோடியை பொது மக்களிடம் இருந்து திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிறுவனம் மூன்று விதமான வைப்பு நிதி திட்டத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி குறைந்தபட்ச வைப்பு நிதியாக ரூபாய் 25000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் திட்டம்
வைப்பு நிதியாக ரூபாய் 25000 கொடுத்து திட்டத்தில் இணைய வேண்டும் இதன் கால அளவு 12 மாதங்கள் இதற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.5 % . இதன் முடிவு காலத்தின் போது பங்குதாரர் 27,210 ரூபாயை முதிர்ச்சி தொகையாகப் பெறுவார்.
இரண்டாவது திட்டம்
வைப்பு நிதியாக ரூபாய் 25000 கொடுத்து திட்டத்தில் இணைய வேண்டும் இதன் கால அளவு 24 மாதங்கள் இதற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.75 % . இதன் முடிவு காலத்தின் போது பங்குதாரர் 29,762 ரூபாயை முதிர்ச்சி தொகையாகப் பெறுவார்.
மூன்றாவது திட்டம்
வைப்பு நிதியாக ரூபாய் 25000 கொடுத்து திட்டத்தில் இணைய வேண்டும் இதன் கால அளவு 36 மாதங்கள் இதற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 9 % . இதன் முடிவு காலத்தின் போது பங்குதாரர் 32,716 ரூபாயை முதிர்ச்சி தொகையாகப் பெறுவார்.இது ஒரு நம்பகமான திட்டமாகும். இதில் ஆபத்து மிகக் குறைவு என்பதால் இதில் முதலீடு செய்வது இலாபகரமாக இருக்கும்.