உயர் ரத்த அழுத்தம் கட்டுப்பட வேண்டுமா ? இதை முதலில் பின்பற்றுங்கள்..

உயர் ரத்த அழுத்தத்தால், இந்தியாவில் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரத்த அழுத்தம் எப்போதுமே உயர்வில் இருந்தால் சிறுநீரகம் உள்பட உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக பாதிக்கப்படும். அதனால், ரத்த அழுத்தம் கட்டுக்குள்ளேயே வைத்திருப்பது நன்று. சரி உயர் ரத்த அழுத்தத்தை எப்படி கட்டுக்குள் கொண்டுவருவது என்று பார்ப்போம். நாம் சாப்பிடும் உணவு வகை கொண்டே எளிய முறையில் உயர் ரத்த அழுத்தைத்தை கொண்டு வர முடியும். இதோ அந்த எளிய டிப்ஸ்..

பூண்டு 

இரத்த அழுத்தம் லேசாக இருக்கக்கூடிய நோயாளிகளுக்கு பூண்டு நல்ல மருந்து.

அதிலும் பூண்டிலுள்ள அல்லிசின், உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு கூடுவதற்கு உதவி செய்கிறது. அதன் விளைவாக இரத்த குழாய்களின் தசைகளை ஓய்வெடுக்க வைப்பதால், இதய விரிவாக்கம் மற்றும் இதயச் சுருக்க இரத்த அழுத்தமும் குறைந்து கட்டுப்பாட்டில் இருக்கும்.

கற்பூரவள்ளி

கற்பூரவள்ளி இரத்தக் குழாய்களின் மெல்லிழைவான தசைகளை ஓய்வெடுக்க வைத்து, இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். மேலும் இது இதய துடிப்புகளை வலிமைப்படுத்தி, அழுத்தத்தின் வேகத்தை குறைக்க உதவுகிறது.

முருங்கைக்காய்

முருங்கைக்காயில் அதிக அளவு புரதச்சத்து மற்றும் பெருமதிப்பு வாய்ந்த வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் போன்றவை நிறைந்துள்ளது. ஆய்வின் படி முருங்கை செடியின் இலைகளிலிருந்து எடுக்கும் சாற்றால், இதயம் விரியும் போது மற்றும் சுருங்கும் போது ஏற்படும் இரத்த அழுத்தம் குறைய வாய்ப்பு உண்டு என்று கூறுகிறது. இதன் பயனை அடைவதற்கு, முருங்கைக் காயை பருப்பு வகைகளோடு சமைத்து உண்ண வேண்டும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காயும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி இரத்தக் குழாய்களை அகலப்படுத்த முக்கிய பங்கு வகிப்பதால், இரத்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது என்று நம்பப்படுகிறது.

முள்ளங்கி

இந்திய சமையலறைகளில் பொதுவாக பயன்படுத்தும் காய்கறியில் முள்ளங்கியும் ஒன்று. அப்படிப்பட்ட முள்ளங்கியில் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கின்ற பொருட்கள் இருக்கின்றன. அதுவும் பொட்டாசியம் அதிகமுள்ள முள்ளங்கி இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.

More News >>