5 ரூபாய்க்கு ஒரு லிட்டர் குடிநீர் திட்டம் தொடக்கம்!

கடல் நீரை சுத்திகரித்து பெறப்படும் தண்ணீரை லிட்டருக்கு 5 ரூபாய்க்கு விற்கும் திட்டத்திற்கான சோதனை ஓட்டம் தூத்துக்குடியில் தொடங்கியது.

தமிழகத்தில் சென்னை அருகே மீஞ்சூர், நெமிலி ஆகிய இடங்களி லும், தென்சென்னையில் பட்டிபுலத்திலும் கடல் நீரை குடிநீராக்கும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு அதிக செலவாகும் என்றாலும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாநில அரசுடன் மத்திய அரசு நிதி உதவியும்பெற்று இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது போல் தமிழக கடலோர பகுதிகளில் மேலும் 5 இடங்களில் கடல்நீரை குடி நீராக்கும் ஆலைகள் நிறுவ தமிழக அரசு திட்டம் தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி நிதி உதவியும் கோரியது. அதன்படி தூத்துக்குடியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை நிறுவப்பட்டுள்ளது.

இங்கு தற்போது சோதனை அடிப்படையில் குடிநீர் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. விரைவில் இங்கு குடிநீர் உற்பத்தி பணி தொடங்கும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியைத் தொடர்ந்து தமிழகத்தின் கடலோரப் பகுதியில் மேலும் 4 இடங்களில் கடல்நீரை குடிநீராக மாற்றும் ஆலைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

More News >>