காவலர் தேர்வுக்கான அழைப்பை வெளியிட்டது தமிழக அரசு !

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் இரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்கான பொதுத் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலி பணியிடங்கள்

* காவல்துறை - இரண்டாம் நிலை காவலர் ( மாவட்ட / மாநகர ஆயுதப்படை ) - 685 ( ஆண்கள் /பொது ) , 3099 (பெண்கள் / திருநங்கைகள்) என இந்த பிரிவில் மொத்தம் 3784 காலி பணியிடங்களையும்

* இரண்டாம் நிலை காவலர் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் 6545 (ஆண்கள்/பொது ) காலி பணியிடங்களையும் அறிவித்துள்ளது.

* சிறைத் துறை சார்பில் இரண்டாம் நிலை சிறைக்காவலர் 112 (ஆண்கள் / பொது ) மற்றும் 7 ( பெண்கள் / திருநங்கைகள் ) என 119 காலி பணியிடங்களை அறிவித்துள்ளது.

*தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் தீயணைப்பாளுக்கு 458 ( ஆண்கள்/பொது ) என அறிவிப்புகளை அறிவித்துள்ளது.

இதனைத் தவிர 72 பின்னடைவு காலிப்பணியிடங்கள் (ஆயுதப்படை 62 பெண்கள் ) மற்றும் ( சிறைத்துறை 10 பெண்கள் )

என மொத்தம் 10,906 காலி பணியிடங்களைத் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.

சம்பளம் : 18200-52900

கல்வி தகுதி: * 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* தமிழை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும்.

*கல்வித் தகுதிக்கு இணையான கல்வி சான்றிதழைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

வயது : விண்ணப்பதாரர் 01.07.2020 அன்று 18 வயது நிரம்பியவராகவும் , 24 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

*பிற்படுத்தப்பட்டோருக்கு வயது வரம்பு 26 வயது .

*ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வயது வரம்பு 29 வயது .

*திருநங்கைகள் -29 வயது வரம்பு

* விதவைகள் -35 வயது வரம்பு

இட ஒதுக்கீடு :

தமிழக அரசின் வகுப்புவாரி இட ஒதுக்கீடு முறையே பின்பற்றப்படும்.

சிறப்பு ஒதுக்கீடு :

முன்னாள் இராணுவத்தினர்/ மத்திய துணை இராணுவப் படையினர் போன்றோருக்கு 5% இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்.

ஆதரவற்ற விதவைகளுக்கு -3%

விளையாட்டு பிரிவினருக்கு -10% சிறப்பு ஒதுக்கீடு பின்பற்றப்படும்.

தேர்வு முறைகள்

*எழுத்துத் தேர்வு -80 மதிப்பெண்கள் *உடற்திறன் போட்டிகள் -15 மதிப்பெண்கள்*சிறப்பு மதிப்பெண்கள்-5 என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.

எழுத்துத் தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக 28 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு கட்டணமாக ரூ.130 செலுத்த வேண்டும்.

விண்ணப்பம் தொடங்கும் நாள் 26.09.2020

மேலும் தெரிந்து கொள்ள www.tnusrbonline.org

More News >>