போதை மருந்து விவகாரத்தில் நடிகை கங்கனாவை ஓட ஓட விரட்டும் பிரபல நடிகைகள்.. போதை பொருளே உங்கள் ஊரில்தான் உற்பத்தியாகிறது எனக் கமல் நடிகை விளாசல்..
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் வாரிசு நடிகர், நடிகைகளைப் பற்றி புகார் கூறிய கங்கனா அவர்கள் செய்த அவமதிப்பால்தான் சுஷாந்த் மனம் உடைந்து தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார் என்றார். மேலும் பாலிவுட்டில் போதைப் பொருள் உபயோகம் உள்ளது என்று குற்றச் சாட்டு சுமத்தினார் விசாரணை நடத்தினால் பல பிரபலங்கள் கம்பி எண்ணுவார்கள் என்றார்.
மேலும் மகாராஷ்டிரா ஆளும் சிவசேனா மீது பாய்ந்தவர் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறினார். மும்பை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் உள்ளது என்றார். கங்கனாவின் இந்த பேச்சு பாலிவுட்டினரையும், சிவசேனாவினரையும் கோபத்தில் ஆழ்த்தியது. அவருக்கு எதிராக சிவசேனா கட்சி மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.பாஜவுக்கு ஆதரவாக கங்கனா பேசுகிறார் என்றும் கூறினர். மனாலியில் தங்கி இருக்கும் கங்கனா அங்கேயே இருப்பது நல்லது. அவர் மும்பை வந்தால் மும்பை மக்கள் அவரை நிற்க வைத்து கேள்வி கேட்பார்கள் என எச்சரித்தனர்.
இதையடுத்து தன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது எனக்குப் பாதுகாப்பு தரவேண்டும் என்று மத்திய பாஜ அரசிடம் கங்கனா கேட்க அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் பிளஸ் கமாண்டோ பாதுகாப்பு அளித்தது, கமாண்டோ பாதுகாப்புடன் மனாலியிருந்து கங்கனா மும்பை வந்தார். விமான நிலையத்தில் சிவ சேனா கட்சியினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உருவ பொம்மையை எரித்தனர். கங்கனாவின் உருவப்படத்தை துடைப்பத்தால் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கங்கனா தனது வீட்டில் மாநகராட்சி அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டியிருப்பதாக மும்பை மாநகராட்சி நோட்டீஸ் விட்டு அதை இடித்தனர். அதற்கு கங்கனா தரப்பில் கோர்ட்டில் தடை பெறப்பட்டது.
மும்பை வந்த கங்கனா தனது வீட்டில் இடிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு ஜனநாயகம் செத்துவிட்டது என மெசேஜ் போட்டதுடன் தினமும் ஒரு தாக்குதலை அரசு மீது நடத்தி வந்தார். மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே மீது நேரடியாகக் குற்றச்சாட்டு சொன்னார் கங்கனா. இது அரசுடனான முதலை அதிகரித்தது. அடுத்த தேர்தலில் பாஜ வின் நட்சத்திர பேச்சாளராக கங்கனா இருப்பார் என்று சிவசேனாவினர் கூறத் தொடங்கினர். இதற்கிடையில் தன் வீட்டில் ஒரு வாரம் தங்கி இருந்த கங்கனா, போதை மருந்து பயன்படுத்தியதாக அவர் பேசிய வீடியோ வீடியோ ஒன்று வைரலானது. இதையடுத்து அவரிடம் போதை தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அரசும் அதற்கு ஒப்புதல் அளித்தது.
அரசை எதிர்த்த கங்கனா மீது கடுமையான போதை மருந்து குற்றச்சாட்டுகள் பாயும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென்று இன்று மும்பையிலிருந்து சொந்த ஊரான மனாலிக்கு கமாண்டோ படை பாதுகாப்புடன் புறப்பட்டு சென்றார். உடைந்த இதயத்துடன் மும்பையை விட்டுச் செல்கிறேன் கங்கனா தெரிவித்திருக்கிறார். மும்பையிருந்து சண்டிகர் விமான நிலையம் சென்றவர் அங்கிருந்து மனாலி சென்றார்.முன்னதாக அவர் பாலிவுட்டில் நடிகர்கள் நடத்தும் பார்ட்டிகளில் போதை மருந்து இலவசமாகத் தரப்படுகிறது. போதைப் பொருள் பயன்பாடு பாலிவுட்டில் அதிகளவில் உள்ளது என்று பொத்தாம் பொதுவாகக் கூறினார். அவரது பேச்சு தற்போது பாலிவுட்டில் பெரும் பிரச்சனையாக வெடித்திருக்கிறது.
ஏற்கனவே நடிகை நக்மா நேரடியாக கங்கனாவை தாக்கி பேசினார். அவர் கூறும்போது. மும்மை பெயரையும் பாலிவுட்டின் பெயரையும் உலக அளவில் கங்கனா கெடுக்கிறார் என்றார். அடுத்து நடிகை குஷ்பு மறைமுகமாகத் தாக்கினார். நான் வரி செலுத்துகிறேன் யாருக்கோ கமாண்டோ பாதுகாப்பு தருகிறார்கள் என கங்கனாவுக்கு மத்திய அரசு கமாண்டோ பாதுகாப்பு அளித்தை விமர்சித்திருந்தார்.தற்போது மற்றொரு பிரபல நடிகையான ஊர்மிளா கங்கனாவை வெளுத்து வாங்கி இருக்கிறார். இவர் கமல்ஹாசன் நடித்த சாணக்யன். இந்தியன் படங்களில் நடித்ததுடன் இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். அவர் கூறும்போது, பாலிவுட்டில் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாக கங்கனா கூறுகிறார். அவரது சொந்த ஊரான இமாச்சல பிரதேசம்தான் போதைப் பொருளின் பிறப்பிடமாக இருக்கிறது. அங்குதான் அவை உற்பத்தி செய்யப்படுகிறது. சொந்த மாநிலத்தைச் சுத்தப்படுத்திவிட்டு பிறகு அவர் மும்பை வரட்டும் என்றார். கங்கனா தன் இஷ்டத்துப் பலர் மீது புகார் கூறிய நிலையில் தற்போது பாலிவுட் நடிகைகள் அவரை ஓட ஓட விரட்டிக் கொண்டிருக்கின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.