ஒரே திருமணம்.. 7 பேர் பலி, 176 பேர் பாதிப்பு!

ஒரு திருமணத்தால் 7 பேர் பலியானதும், 176 பேர் பாதிப்படைந்த சம்பவம் கொரோனாவால் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் நடந்தது அமெரிக்காவில்.அமெரிக்காவின் மத்திய மைனேயில் உள்ள விடுமுறை நகரமான மில்லினொக்கெட்டில் ஆகஸ்ட் 7 ம் தேதி ஒரு தம்பதிக்குத் திருமணம் நடந்தது. கொரோனா பெருந்தொற்றால் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று அமெரிக்க அரசு கட்டுப்பாடு விதிக்கிறது. ஆனால் அதனை மீறி இந்த திருமண நிகழ்வில், 65 விருந்தினர்கள் கலந்துகொண்டிருக்கின்றனர்.

இந்த 65 பேர் மூலமாகத் திருமணம் நடந்த மைனேவில் இருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் தள்ளி இருக்கும் பலருக்கும் கொரோனா தொற்று வந்துள்ளது. மில்லினொக்கெட்டிலிருந்து தென்மேற்கே 220 மைல் தொலைவில் உள்ள ஆல்பிரட் நகரில் உள்ள யார்க் கவுண்டி சிறையில் இந்த திருமணத்தில் கலந்துகொண்டவர்களைச் சந்தித்தால் சிலருக்கு கொரோனா வந்துள்ளது. மொத்தம் இதுவரை 176 பேருக்கு இந்த திருமண நிகழ்வின் மூலம் கொரோனா பரவியுள்ளது. அதேபோல் 7 பேர் இறந்துள்ளனர். இறந்த 7 பேரும் நேரடியாக நபர்கள் யாரும் திருமணத்திலோ அல்லது வரவேற்பிலோ கலந்து கொள்ளவில்லை.கடந்த இரு வாரங்களாகத் தொடர்ந்து கொரோனா தொற்று சங்கிலியாகப் பரவி வருகிறது என்று வேதனை தெரிவித்துள்ளனர் அமெரிக்க அதிகாரிகள்.

More News >>