எல்.ஐ.சி யின் மைக்ரோ பச்சத் காப்பீடு திட்டம் !

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் வழங்கும் (Life insurance corporation ) வழங்கும் மைக்ரோ பச்சத் காப்பீடு திட்டம். இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி ல் பல்வேறு காப்பீடு மற்றும் வாழ்வாதார திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இந்த வரிசையில் மைக்ரோ பச்சத் எனும் புதிய காப்பீடு திட்டத்தை நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திட்டம் குறைந்த வருவாய் ஈட்டும் பால் , காய்கறி வியாபாரிகள் ,ஆட்டோ ஓட்டுநர் , சுமை தூக்குபவர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட திட்டமாகும் .இந்த திட்டம் பங்குச் சந்தை சாராத விபத்து காப்பீடு மற்றும் திறன் இழப்பு காப்பீடு கலந்த திட்டமாகும்

திட்டத்தின் எண் :951 UIN No : 512N329V02

தகுதிகள் :

* பாலிசிதாரர்களின் வயது வரம்பு 18 முதல் 55 வரை * அதிகபட்ச பாலிசி முதிர்வு வயது 70 ஆகும்.* பாலிசி காலம் 10 முதல் 15 ஆண்டுகள் * காப்புத்தொகை குறைந்தபட்சம் 50000 , அதிகபட்சமாக 200000 வரை . காப்பீடு தொகையின் மடங்கு 5000

பயன்கள்* மருத்துவ பரிசோதனை தேவையில்லை * 3 ஆண்டுகளுக்குப் பின் கடன் பெறும் வசதி உண்டு .*ஜி.எஸ்.டி வரி விதிப்பு கிடையாது.*வருமான வரி சலுகை உண்டு *மூன்று ஆண்டுகளுக்கு மேல் 5 ஆண்டுகளுக்குள் பிரீமியம் செலுத்தி இருப்பின் அடுத்த 6 மாதங்களுக்கு Auto coverage உண்டு .*ஒரு வருட பிரிமியம் செலுத்திய பின் சரண்டர் செய்யும் வசதியும் உண்டு

ஆயுள் காப்பீடு பாதுகாப்பு

*முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் இறப்பு ஏற்படின் காப்புத்தொகை வழங்கப்படும்.

* ஐந்து வருடத்திற்குப் பிறகு இறப்பு ஏற்பட்டால் காப்புத்தொகை மற்றும் லாயல்டி தொகையும் சேர்த்து வழங்கப்படும்.

More News >>