சினிமா வாய்ப்புக்காக நிர்வாணமாக நிற்க சொன்னார் பிரபல இயக்குனருக்கு எதிராக நடிகை பகீர் புகார்
சினிமாவில் வாய்ப்பு வேண்டும் என்றால் தன் முன் நிர்வாணமாக நிற்க வேண்டும் என்று என்னிடம் டைரக்டர் சாஜித் கான் கூறினார் என்று பிரபல நடிகையும், மாடலுமான போலா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாலிவுட்டில் 'ஹவுஸ்ஃபுல்', 'ஹே பேபி', 'ஹிம்மத்வாலா' உள்பட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் சாஜித் கான். இவர் சில படங்களில் நடித்தும் உள்ளார். இந்நிலையில் கடந்த இரு வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்திய மீ டூவில் இவருக்கு எதிராகவும் சில நடிகைகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து இவருக்கு தயாரிப்பாளர்கள் ஒரு வருடம் தடை விதித்தனர்.
இந்நிலையில் பிரபல நடிகை போலா, டைரக்டர் சாஜித் கானுக்கு எதிராக ஒரு பரபரப்பு புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் கூறியிருப்பது: நான் கடந்த சில வருடங்களுக்கு முன் ஹவுஸ்ஃபுல் பட வாய்ப்பிற்காக டைரக்டர் சாஜித் கானை சந்தித்தேன். அப்போது எனக்கு 17 வயது இருக்கும். சினிமாவில் வாய்ப்பு வேண்டுமென்றால் தன் முன்னால் நிர்வாணமாக நிற்க வேண்டும் என்று அவர் கூறினார். மேலும் என்னிடம் அவர் மோசமாக நடந்து கொண்டார். அது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த இரு வருடங்களுக்கு முன் சாஜித் கானுக்கு எதிராக மீ டூ புகார் வெளிவந்தபோதே நானும் அவருக்கு எதிராக புகார் கூற நினைத்திருந்தேன். ஆனால் பயம் காரணமாகத் தான் நான் எதுவும் கூறாமல் இருந்தேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.