ஆஃப் ஸ்பின்னர் அஸ்வினுக்கும் காத்ரீனா கைஃபுக்கும் என்ன தொடர்பு?
அஸ்வின் இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல் அணிக்காக விளையாட இருக்கிறார். கடந்த இரண்டு தொடர்களிலும் அவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தார். இந்தத் தொடரில் டெல்லி கேப்பிட்டல் அணியில் அஸ்வினுடன் ரஹானே, ஸ்டோனிஸ் ஆகியோரும் விளையாட உள்ளனர்.
ஆஃப் ஸ்பின்னரான அஸ்வின் இதுவரை 139 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 125 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் பந்துவீச்சில் 26.43 என்ற சராசரியை கொண்டுள்ள அவரின் எகனாமி ரேட் 6.79 ஆகும். டெல்லி அணி செப்டம்பர் 20ஆம் தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சந்திக்க உள்ளது.
அஸ்வினின் ரசிகர் ஒருவர் ஆஃப் ஸ்பின்னர்கள் பந்து வீசும் புகைப்படங்களை தொகுத்துள்ளார். அஸ்வின், இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கிரீம் ஸ்வான் மற்றும் இந்தியாவின் ரமேஷ் பொவார் ஆகியோர் பந்துவீசும் புகைப்படங்களோடு காத்ரீனா கைஃப் அதேபோன்று போஸ் கொடுக்கும் படத்தையும் இணைத்துள்ளார். ரசிகரின் இந்தத் தொகுப்பை அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.