வெளியில் செல்லக்கூடாது ரெஸ்ட் எடுங்க.. அமித்ஷாவுக்கு டாக்டர்கள் அட்வைஸ்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையில் முன்னேற்றம் இருக்கவே மருத்துவமனையிலிருந்தே அலுவலக பணிகளை மேற்கொண்டு வந்தார். இதனிடையே, ஆகஸ்ட் 14-ல் மீண்டும் அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது.

அதில் அவருக்குத் தொற்று இல்லை என்று முடிவு வந்ததையடுத்து அமித்ஷா வீடு திரும்பினார். எனினும் அலுவலகம் செல்லாமல் வீட்டிலிருந்தே பணிகளை கவனித்து வந்தார். இந்தநிலையில்தான் மீண்டும் அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டவர், ஆகஸ்ட் 31ம் தேதி அமித்ஷா வீடு திரும்பினார்.

வீட்டில் இருந்த அவருக்கு திடீரென சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த முறை முழுவதுமாக அவரின் உடல்நிலை சரியான பின் நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். வீடு திரும்பும் முன் மருத்துவர்கள் அமித்ஷா அறிவுரைகளை வழங்கியுள்ளனர். அதன்படி எங்கும் சில நாட்கள் வீட்டிலேயே இருந்து ஓய்வெடுக்க வேண்டும். இப்போது உள்ள சூழ்நிலையில் வெளியில் சென்றால் மீண்டும் உடல்நலன் பாதிக்கக் கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்று அமித்ஷா தரப்பு கூறியுள்ளது.

More News >>