தேசிய கொடி போர்த்தும் அளவிற்கு ஸ்ரீதேவி என்ன செய்தார்? - ராஜ் தாக்கரே காட்டம்

மூவர்ணக்கொடி போர்த்தும் அளவிற்கு ஸ்ரீதேவி நாட்டுக்காக என்ன செய்தார் என்று மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த மாதம் 24ஆம் தேதி சனிக்கிழமை இரவு துபாயில் தனது குடும்ப உறவினர் இல்லத் திருமண விழாவுக்கு சென்றிருந்தபோது, நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால், அவர் குளியல் தொட்டியில் தவறுதலாக மூழ்கி உயிரிழந்துள்ளார் என தடயவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இறந்த ஸ்ரீதேவியின் தலையின் பின்புறம் ஆழமான காயங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. பின்னர் துபாய அரசின் உடல்கூராய்வு மற்றும் தடயவியல் சோதனையும் நடத்தப்பட்ட பிறகு அவரது உடல் இந்தியா கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து மஹாராஷ்டிரா அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய ராஜ் தாக்ரே, “மூவர்ணக்கொடி போர்த்தும் அளவிற்கு அவர் நாட்டுக்காக என்ன செய்தார்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், நீரவ் மோடியின் பல கோடி ரூபாய் ஊழல் விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே, ஸ்ரீதேவியின் மரணத்தை பெரிதாக்கிக் காட்டும் படி மீடியாக்களுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்துள்ளது என்றும் ராஜ்தாக்ரே குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

More News >>