வருகிறது பிரதமர் மோடியின் வாழ்க்கை படம்..முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு...!
ரஜினிகாந்த் நடித்த தர்பார், 2.0, விஜய் நடித்த கத்தி படங்களை தயாரித்ததுடன் அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் ஆகிய படங் களை தயாரிக்கிறது லைகா நிறுவனம்.
இப்படங்களை அடுத்து பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை படத் தை தயாரிக்கிறது லைகா நிறுவனம். இதுபற்றி லைகை நிறுவனம் வெளியிட் டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்த நாள் கொண்டாடப் படுகிறது. அவர் மீதான அன்பையும், மரியாதையையும் கொண்டாடும் பொருட்டு, லைகா தயாரிப்பு நிறுவன தலைவர் சுபாஸ்கரன், நரேந்திர மோடி வாழ்கையை பற்றிய சிறப்பு திரைப் படத்தின் தமிழ் வடிவமான கர்ம யோகி படத்தை தமிழில் வழங்கு கிறார்.
திரைப்பட ஆளுமை சஞ்சய் லீலா பன்சாலி வழங்க நரேந்திர மோடியின் இளமை பருவத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் இந்தி இந்தி திரைப் படத்தை மஹாவீர் ஜெயின் தயாரிக் கிறார். இயக்குனர் சஞ்சய் திரிபாதி இயக்குகிறார். ஷாய்ல் ஹடா இசை அமைக்கிறார். இப்படத்தின் இசையை டிவோ நிறுவனம் வெளியிடுகிறது. இது விரைவில் திரைக்கு வரவுள்ளது. தமிழில் லைகா நிறுவன வெளியிடுகிறது.