விஜய் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி, தயாரிப்பாளருக்கு ஒரு கெட்ட செய்தி.
விஜய், அட்லி, ரஹ்மான் கூட்டணியில் பயங்கர எதிர்பார்ப்பை உருவாக்கிய திரைப்படம் 'மெர்சல்'. தீபாவளிக்கு திரைக்கு வரும் என முன்பே திட்டமிடப்பட்டிருந்தாலும், பல பிரச்சினைகளால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்ப்பட்டது.
இதனிடையில் நடிகர் விஜய் முதலமைச்சரை சந்தித்தார். அரசியல் தலையீட்டால் நீதிமன்ற தடைகள் பலவற்றை கடந்து நேற்று மெர்சல் திரைப்படம் உலகம் முழுவதும் 3,500 தியேட்டர்களில் வெளியானது.
விஜய்யின் ரசிகர்கள் தியேட்டர்களிலும், ஆன்லைனிலும் முட்டி மோதி மெர்சல் டிக்கெட்களை வாங்கி படத்தை பார்த்து வருகின்றனர். திரைப்படமும் தமிழ் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
படத்தின் முதல் நாள் வசூலைப் பொருத்தவரை, தமிழ்நாட்டில் மட்டும் 22 கோடிக்கு வசூலாகி புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது இதற்கு முந்தைய சாதனையான ரஜினிகாந்தின் கபாலி படத்தின் முதல் நாள் வசூலான 21.5 கோடியை விஜய்யின் மெர்சல் முடியடித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி வசூல் சாதனையில் மெர்சல் முதலிடத்தை பெற்றிருந்தாலும்,ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றிருந்தாலும், தயாரிப்பாளருக்கு நஷ்டம்தான் ஏற்படும் என திரைப்பட விநியாகஸ்தர்கள் கூறியுள்ளனர்.
120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம், 150 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் லாபம் கிடைத்ததுப் போல தெரிந்தாலும், 120 கோடி என்பதில் பணத்திற்கான வட்டி சேராதாம்.
120 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு, பல மாதங்கள் ஆனதால் அதற்கான வட்டித்தொகை அளவுக்கு மீறி இருக்கும் என்று விநியோகஸ்தர்கள் கூறியிருக்கிறார்கள். இதனால் படம் 150 கோடிக்கு விற்பனை செய்யப்படிருந்தாலும், அதனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் தான் ஏற்படும் என கூறப்படுகிறது.
இந்த வருட தீபாவளிக்கு விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும், விஜய் மற்றும் 'மெர்சல்' தயாரிப்பு தரப்புக்கு சோகமான தீபாவளி என்றே சினிமா வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.