மாயந்தி ஹேப்பி அண்ணாச்சி... தேடலுக்கு கிடைத்த சந்தோஷ செய்தி!
ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பும், பின்பும் தொகுப்பாளர்கள் வந்து டிவிக்களில் பேசுவார்கள். இவர்களுக்கென தனி ரசிகர்கள் உண்டு. ஐபிஎல் போட்டிகள் உட்பட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் தொகுப்பாளராக இருந்து பிரபலமானவர் மயாந்தி லாங்கர். தனது பேச்சு, அழகு, ஸ்டைல், வர்ணனை உள்ளிட்டவற்றால் மற்ற தொகுப்பாளர்களை விட அதிக புகழ் பெற்ற தொகுப்பாளர் என்றால் அது மயாந்தி மட்டுமே. இவர் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னியின் மனைவியும்கூட.
இதற்கிடையே, நேற்று வெளியான இந்த ஆண்டு ஐபிஎல் சீஸனின் வர்ணனையாளர்கள் பட்டியலில் மயாந்தி பெயர் இடம்பெறவில்லை. இதனையடுத்து அவர் வேலையை விட்டு நின்றுவிட்டாரா என்று ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நிர்வாகத்தை நோக்கி கேள்விக்கணைகளை வீசினர். அதற்கு மயாந்தியே தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும், அதனாலேயே இந்தமுறை ஐபிஎல் தொடரில் தொகுப்பாளராக பங்கேற்க முடியவில்லை என்று குறிப்பிட்டு தனது கணவர் பின்னி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார். மாயந்தியை ரசிகர்கள் மிஸ் செய்யும் அதே வேளையில் அவருக்கு குழந்தை பிறந்திருக்கும் தகவல் அறிந்து தற்போது குஷியில் உள்ளனர்.