10 வருட காதல்!!நண்பனை கரம்பிடித்த சின்னத்திரை நடிகை
சின்னத்திரை நடிகை தனலட்சுமி அவர்கள் 10 வருடங்களாக தனது நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் வெளியாகும் பூவே பூச்சூடவா தொடர் பார்வையாளர்களை கவரும் வன்னம் புதிய திருப்பதுடன் ஓடிக்கொண்டு வருகின்றது.அதில் அனு கதாபாத்திரமான தனலட்சுமி என்பவர் தனது இளம் பருவத்தில் இருந்து சின்னத்திரையில் நடித்து வருகிறார்,தனலட்சுமி என்றால் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை அந்த அளவுக்கு அனு கதாபாத்திரம் மக்களின் மனதில் பதிந்துவிட்டது.இவர் 10 வருடங்களாக தனது உயிர் நண்பரை காதலித்து வந்தார்.கடந்த ஏப்ரல் மாதம் தான் இவர்களது 10 வருட காதல் களம் முழுவதுமாக நிறைவுபெற்றது.இதையடுத்து சில தினங்களுக்கு முன் தனது பெற்றோர்,சொந்தக்காரர்கள்,நண்பர்கள் என எல்லோரின் முன்னிலையில் தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.இவர்கள் திருமணம் நடந்த அடுத்த நாளில் புதிய காரை வாங்கியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "புதிய வருகை" என்று பதிவிட்டுள்ளார்.