தமிழ்ப் புத்தாண்டிலாவது அறிவிப்பு வருமா?- காத்திருப்பில் ரஜினி ரசிகர்(தொண்டர்)கள்!
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து வருகிற தமிழ் புத்தாண்டில் கண்டிப்பாக அறிவிப்பார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கைக்கு மேல் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்னர் சென்னையில் எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்து வைத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து வெளிப்படையாகவேப் பேசினார்.
தமிழக அரசியல் சூழலில் நிலவி வரும் வெற்றிடத்தை நிரப்பவே அரசியல் களம் காண இருப்பதாகக் கூறிய ரஜினிகாந்த் விரைவில் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திடீரென ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என புதிதாக சமூக வலைதளங்கள் பக்கம் சூப்பர்ஸ்டார் என்ட்ரி கொடுத்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து பொது வெளியில் தன்னை நிலைநிறுத்தியவாறு இருக்கிறார் சூப்பர்ஸ்டார். இதையடுத்து வருகிற ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு அன்று ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியின் பெயரையும் சின்னத்தையும் அறிவிப்பார் என்று அவரது ரசிகர்களும் தொண்டர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com