ldquoமெர்குரிrdquoயின் ப்ரோமோ பாடல் ரிலீஸ் (வீடியோ)

பிரபுதேவா நடிப்பில் வெளியாக இருக்கும் மெர்குரி படத்தின் ப்ரோமோ பாடலின் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் மெர்குரி. ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் பென் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், மேயாத மான் இந்துஜா, அனிஷ் பத்மன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படம் வசனமே இல்லாத த்ரில்லர் மூவியாக உருவாகி இருக்கிறது.

சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் ப்ரோமோ பாடல் வெளியாகி உள்ளது. இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் 13ம் தேதி ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>